Friday, November 5, 2010

தீராத விளையாட்டு - ராமச்சந்திரன் ஸ்ரீனிவாசன்

விளையாட்டுப் பிள்ளைன்னு கண்டிச்சி
விடியல்ல ஸ்கூலுக்கனுப்பி
எம்மவன் எஞ்சினியர்ன்னு
எங்கப்பா முடிவு செஞ்சி
கல்யாணம் கட்டி முடிச்சி
மணவாழ்க்கையில முங்கிக் குளிச்சி
பிள்ளைங்களப் படிக்க அனுப்பி
அதுங்க பெரிசானதும் பெருமப்பட்டு
மகள மாமியார் வீட்டுக்கனுப்பி
என் மனைவிய மாமியாராக்கி
இப்ப
திண்ணையில சேர் போட்டுத்
தூங்கலாம்னு நினைக்கையில
பேட் புடிச்சி விளையாடக் கூப்புடுதான்
எம்பேரன்!

No comments: