மாற்றம் |
நுழையத் தொடங்கும்போதே என்னை மாற்றத் தொடங்கினாய் விரும்பிக் கேட்ட இசையை வெறுக்கச் சொன்னாய் மகிழம்பூ மணமும் உனக்கு உகந்ததாயில்லை பறவைகளுக்கு நீர்வைப்பதிலும் உவப்பில்லை உனக்கு முழுவதும் ஆக்கிரமித்த பின்னும் நீ என்னவோ அப்படியேதான் இருக்கிறாய். ஆனால் ஜன்னல் கம்பிகளின் இடைவெளியில் வந்துகொண்டுதான் இருக்கின்றன என் பிரியத்துக்குரிய பூனைகள்
மௌனம்
மௌனம் சிறுசிறு துண்டுகளாகச்சிதறிக்கிடந்தபோதே ஒரு முறத்தில் அள்ளியிருக்கலாம் இப்போது இந்த அறை நிறைந்திருக்கிறது அதை நீ செய்வாயா நான் செய்வேனா என்ற யுத்தத்தில்
வேண்டாம்
நீயும் அதைச் சொல்லிவிடாதேஉயிர் அளித்து ஊன் வளர்த்து திரிய விட்டுவிடாதே சிசு மரணம்கூடத் தாங்கேன் இனி தாய்மைக் கூறுடன் வாழ்ந்து முடிய சித்தங்கொண்ட பின் பிரிந்து பிறழ்வுற அது நிகழ்ந்திட வேண்டாம். நீயும் அதைச் சொல்லிவிடாதே |
Sunday, September 9, 2012
அரும்பு கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment