Saturday, May 12, 2012

போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள் -


மாலதி கல்பனா அம்புரோஸ் கவிதை
தொலைந்த நிலம்
இடம்பெயரும் உறைந்த மென்காற்று
குரலற்று அலகு இழந்த பறவைகள்
இலைகளும் நிழல்களுமற்ற மரங்கள்
முகிழ்த்தாலும் மலர முடியாமல் விம்மும் பூக்கள்

உதிர்ந்து விழ அஞ்சும் ஒரேயொரு கண்ணீர்த் துளி
சுவரை உடைத்துவிடத் துடிக்கும் ஒரேயொரு
நெடுமூச்சு
பாட எவருமே அற்ற மாபெரும் பாடல்
ஆன்மாவைத் தொலைத்துவிட்ட
ஒரு சொர்க்க நிலம்.
 

மாலதி கல்பனா அம்புரோஸ் கொழும்பில் வசித்துவரும் சிங்களக் கவிஞர். சிங்களத்தில் கவிதைத் தொகுப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கவிதைகளையும் கவிதை குறித்த கட்டுரைகளையும் மொழிபெயர்த்துவருகிறார்.

No comments: