Saturday, March 12, 2011

கவிதைகள் கே. சி. செந்தில்குமார்

ஒரு பெண்ணின் உடலைப் போலப்
பாதுகாப்பானது
மிருதுவானது
மின்மினிகளைப் போல ஒளிரும் தன்மையுடையது
எதுவுமில்லை என்றிருப்பவர்களுக்கு.
பாதுகாப்பானது எனது வீடு
எனது வீட்டில் நான்கைந்து அறைகள் உண்டு
எல்லா அறைகளும் ஏதாவதொரு
உபயோகத்திற்கானவைதான்.
தினம் அதிகாலை விழிப்பு கொண்டதும்
எல்லா அறை சன்னல்களையும் திறந்துவிடுகிறேன்.
அப்போது
ஞானத்தின் இதழ்களை நுகர்வுகொள்வதைப் போல
ஏதோ ஒன்று
என்னுடலினுள் நுழைவு கொள்கிறது.
இந்த சன்னலைத் திறப்பதுபோல
மனதைத் திறக்கவும் மூடவும் முடியவில்லையே.
திறக்கவும் மூடவும் அறிந்திருந்தால்
கூடுள்ள இந்த வீடெதற்கு
பராபரமே.

No comments: