வெறுமையின் காலம்
படபடப்புடன் மனம் ஓட
நாடி நரம்புகள் புல்லரிக்க
என் ரகசியம்
உனக்கும் தொற்றுகிறதோ
எனப் பதறுகிறேன்
என் கட்டுப்பாடு அறுந்துவிழ
ரகசியத்தின் ஒரு புள்ளி
உன் மனதிலும் ஏறியதோ
எனப் புலம்புகிறேன்
ரகசியங்களற்ற மனம் வேண்டி
வாழ்நாளெல்லாம் இறைஞ்சுகிறேன்
ரகசியங்கள் தொடர்ந்துவர
குவியலாக்கிக் கொளுத்துகிறேன்
மேலும் மேலும்
அடர்த்தியாயின ரகசியங்கள்
ரகசியங்களைத் தோண்டிக்கடாச
எந்த உபாயமும் கூடி வரவில்லை
என் வாழ்வின் வரைபடம் எங்கும்
இறைந்து கிடக்கும் ரகசியங்களை
ஒரு பாயாய்ச் சுருட்டிக்
கடலில் கொட்டுகிறேன்
கடல் நீலமாகி
ரகசியங்களின் கடலாய் மாறிப்போனது.
(ஓவியர் ஆதிமூலம் அவர்களின் நினைவுக்கு)
Saturday, March 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment