மீளா மூட்டம்
மாலைக் காற்றின் ஆவல்கள்;
மழையின் அவல இசை,
என்னைத் தனது
மீளா மூட்டத்திற்குள் அழைக்கிறது அது
தனித்து நீளும் பாதையில் கடப்பவரில்லை.
காற்று மேலெழக் குமிழ்கள் கொப்புளிக்கின்றன
ஆற்றில்.
எனக்குத் தெரியாது
நான் வீடு சேர்வேனாயென.
சந்திப்புக்கான சந்தர்ப்பங்கள் குறித்தும்.
பிணமான தினங்களின்
நிழல்கள் நீண்டு கிடக்கின்றன தரையெங்கும்.
Saturday, March 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment