Friday, March 11, 2011

கவிதைகள் - அழகுநிலா

சரியோ தவறோ
எதுவுமில்லை உனக்கு.
எனக்கு எல்லாமும் வலிக்கிறது.
நீ பேசும் எந்த மொழியும்
யாருக்கும் புரிந்ததில்லை.
உனது விடியலில் எனது
விழிகள் திறக்கின்றன.
மிருகத்துக்கும் பறவைக்கும்
இலைக்கும் எனக்கும் ஒரே காற்று.
நமக்குள் சமரசம் இல்லை.
நீ என யாருமில்லை என்கிறாய்.
இதயத்தின் அறைகளுக்குள்
முட்டி மோதுகிறது உதிரம்.
எனது எச்சிலை நானே
விழுங்கிக்கொள்கிறேன்.
அமில மழை உன் காட்டில்.
உனக்கும் எனக்குமிடையே
எப்போதும் நமது உடல்.

No comments: