Monday, January 18, 2010

கவிதைகள் - மு மேத்தா

அன்போடு
அனுப்பி வைக்கிறேன் -
உன்
கண்கள் நடத்தும்
காதல் திருவிழாவில்
கலந்து கொள்ள
என் கடிதங்களை!

சொர்க்கத்தின்
விலாசத்தைப் போல
விசாரித்தேன்
அவள் தான் சொர்க்கம்
என்பதை
அறிந்து கொள்ளாமல்

கம்பிகளால் ஆன
குளங்களை
கண்டு கொண்டேன்
உன்
தாமரை முகம் மலரும்
ஜன்னல்கள்
என்று...

உன்ன்டுடைய உதடுகள்
உச்சரிக்கும் வரை
நான்
உணர்ந்ததில்லை...
என்னுடைய பெயர்
இத்தனை அழகாய்
இருக்கிறதென்று!

எனக்கு தெரியும்
நீ விரும்புவது
என்னையல்ல
என் கவிதைகளைத்தான்
என்று


ஆனால்
உனக்குத் தெரியும்
உன்னை விரும்புவது
என் கவிதைகளல்ல -
நான்தான்
என்று?

தபால்காரனுக்குக் கூட
என் மீது
இறக்கமிருக்கிறது
எவர் வீட்டு கடிதங்களையாவது
என் வீட்டில் போட்டு
தற்காலிக மகிழ்ச்சியாவது
தருகிறான்

நீதான்
இரக்கமில்லாமலே
இருக்கிறாய்...
எனக்கு வரவேண்டிய
கடிதத்தை
இன்னும் எழுதத் தொடங்காமல்


எழுது
எழுது..
எனக்கொரு கடிதம்
எழுது
என்னை நேசிக்கிறாய்
என்றல்ல
நீ
வேறு எவரையும்
நேசிக்கவில்லை
என்றாவது
எழுது!

வெள்ளைப் போட்டிட்டு
மேனியெங்கும் பூச்சூடி
ராத்திரிப் பெண்
ஒரு ரகசியம் சொல்கிறாள்

"பிரிந்தவர்
வருந்தினார்...
இருந்தவர்
அருந்தினார்..."

அரியாசனம் ஏற
ஆசைப்படவில்லை
வரலாற்றில்
இடம் கேட்டும்
வருத்தப்படவில்லை
நான்
கேட்கும் இடமெல்லாம்
நீ தலைவைத்துத் தூங்குகிற
தலையணையைத்தான்

அணைக்கக்
கூபிட்டேன்
குதுகலமாக
வந்து
குளிர் காய்ந்துவிட்டுப்
போகிறாயே...

பரண்மேலே இருக்கும்
கட்டை போல்
உன் மனது
பத்திரப்படுத்தப்
பட்டிருக்கையில்
என் உள்ளம் மட்டும்
ஏன்
அடுப்படியில் எரியும்
விறகுபோல்
அவதிப்படுகிறது?

நான்
சண்டையைத் தொடங்குகிறேன்
ஒரு
சமாதானத்திற்க்காக
நீயும்
சமாதானமாக இருக்கிறாய்
சண்டையிடுவதற்க்காக!

வீணாக ஏன்
திறந்து வைக்கிறாய்
உன்
விழி வாசலை...
இதவ வீட்டைப்
பூட்டி
சாவியை
இடுப்பில்
முடிந்து கொண்ட பிறகு!

கத்தி மாதிரிக்
கண்கள் - என்றேன்
என்
இதயத்தின் மீதுதான்
தீட்டிப் பார்க்கப் போகிறாய்
என்பதைத்
தெரிந்து கொள்ளாமல்...

தேவ வரலாற்றில்
இடம் பெறாமல் போன
தியாகியைப் போல...
ஆயிரக்கணக்கான
இளைன்ஞர்களின்
பெயர்கள்
விடுபட்டு விட்டன
உன்
திருமண
அழைப்பிதழில்

சரித்திரம்
இறந்தவனுக்காகக்
கவலைப்படுகிறது
சமத்துவம்
இருப்பவனுக்காகக்
கவலைப்படுகிறது

என்
கவிதையோ
இறக்காமலும்
என்னோடு
இருக்காமலும்
இருப்பவளுக்காகக்
கவலைப்படுகிறது!

என் ஞாபகங்களைக்
கழற்றி
எறிந்து விட்டு
வாழ்க்கை பாதையில்
நீ
நடக்க முடியாது...

கவனித்துக் கொள்...
அவை உன்னுடைய
காற் செருப்புகள்
அல்ல...
கால்கள்!

இதயம்
கண்களைக் காட்டிலும்
மென்மையானது என்பதை
ஏற்று கொள்ளமாட்டேன்

ஒரு சின்னத்
தூசி விழுந்த போது கூட
தாங்க முடியாமல்
கண்கள்
தவித்தன...

இதயமோ
இழந்த காதலின்
இடி விழுந்த பிறகும்
இடியாமல் இருக்கிறது!

கலங்காதே!
அவர்கள் என்னைக்
கல்லால் அடிக்கவில்லை
பரிசோதிக்கிறார்கள்

காதலின் போர்க்களத்தில்
காயம் பட்ட பிறகும்
ஓடாமல் நிற்கும்
உண்மை வீரனா
என்று...

படிப்பதற்கு
உனக்குப்
பயன்படும்
உன்னுடைய
கண்களைத்தான்
உன்னை நான்
படிப்பதற்கும்
பயன்படுத்துகிறேன்

வேக வேகமாய்
வந்தேன் ஒரு
வேட்டைக்காரனைப் போல
இருளில்
உன்னைத்
தீண்டிய பிறகுதான்
தெரிந்தது
நான்
இரையென்று

இரவு
வெளிச்சமாகிறது
என்னோடு
நீ இருக்கும்போது
வெளிச்சம்
பகையாகிறது
என்னோடு
நீ இருக்கும்போது...

விழித் தூண்டில்கள்
நம் மீது
வீசப்படாதா
என்று
மீன்கள்
காத்திருக்கும்
மேனி !

கடிதம் எழுதுவதை
நிறுத்தி விட
காரம் இதுதான்
நான் எழுதும்
காதல் கடிதங்களின்
எடை
அதிகரிக்க அதிகரிக்க
உன்னுடைய எடை
குறைந்து கொண்டே
வருகிறது...

No comments: