Saturday, March 12, 2011

கவிதைகள் இன்பா சுப்ரமணியன்

படகுத்துறை

எதிர்கரையில் நின்று
சைகைசெய்து அழைக்கிறான்
படகுக்காரனை
நீர்த் துறையிலிருக்கும்
அத்தனை படகுகளும்
அவனைப் பார்த்தவாறிருக்கின்றன
ஆனால் படகுக்காரர்கள்
யாரும் அவனைப்
பார்த்ததாய்த் தெரியவில்லை.
எதிர்பார்த்தலின்
சிறிய படகொன்று
ததும்பி... ததும்பி அசைகிறது
அவனை நோக்கி.

n

மடாலயம்

மடாலயத்தின்
கதவுகள் திறந்துகிடக்கின்றன
உள்ளே எல்லோரும் கண்களை மூடித்
தியானிக்கின்றனர்.
பிறகு எல்லோரும்
போய்விட்டனர்
மடாலயம் ஆழந்து தியானிக்கிறது
கதவென்னும்
தன் அகன்ற கண்களை மூடியபடி.

No comments: